search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிஜாமாபாத் தொகுதி"

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. #LokSabhaElections2019 #Nizamabad #BallotPaper
    நிஜாமாபாத்:

    பாராளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 200க்கும் அதிகமான வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை முடிந்து மனுக்களை வாபஸ் பெறுவது நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 185 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு அதிக அளவிலான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.



    இந்த தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்பியாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மது யாஷ்கி கவுடா, பாஜக சார்பில் தர்மபுரி அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இதற்கு முன்பு 1996ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, நல்கொண்டா மாவட்டத்தில் புளோரைடால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, 480 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது.

    ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக 16 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும். ஒரு கண்ட்ரோல் யூனிட்டுடன் 4 இயந்திரங்களை இணைக்கலாம். எனவே நோட்டாவுடன் சேர்த்து 64 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Nizamabad #BallotPaper
    ×